திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை!
நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர், கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சற்று முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
களுத்துறை - தினியாவல பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) விசேட பொலிஸ் குழுவினரால் நேற்று (03) இவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், நீதிமன்றில் ஆஜராகத் தவறியதால் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட ஞானசார தேரரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் இன்று கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.