பிரிட்டனில் தமிழர் எதிர்ப்பால் நாமல் ராஜபக்ஷவின் கேம்பிரிட்ஜ் உரை ரத்து

நிகழ்வை ரத்து செய்ததற்கு நாமல் ராஜபக்ச தரப்பில் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.

பிரிட்டனில் தமிழர் எதிர்ப்பால் நாமல் ராஜபக்ஷவின் கேம்பிரிட்ஜ் உரை ரத்து
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் யூனியனில் வழங்கத் திட்டமிடப்பட்ட உரை, பிரிட்டனில் வாழும் சில புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பையடுத்து  ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ, அவருடைய பிரிட்டன் பயணத்தின் போது இந்த மாத இறுதியில் ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கும் (Oxford Union) கேம்பிரிட்ஜ் யூனியனுக்கும் (Cambridge Union) உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், பிரிட்டனில் உள்ள தமிழர் சமூகங்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அவரின் பங்கேற்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரிட்டனில் உள்ள தமிழ் மாணவர் சங்கங்கள் மற்றும் தமிழ் இளைஞர் அமைப்புகள் (TYO UK) நாமல் ராஜபக்சுக்கு வழங்கப்பட்ட உரை வாய்ப்பை உடனடியாக ரத்து செய்யுமாறு கோரியுள்ளனர். இந்த எதிர்ப்பின் பின்னர், கேம்பிரிட்ஜ் யூனியன் உரையை ரத்து செய்வதாக ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர்.

நிகழ்வை ரத்து செய்ததற்கு நாமல் ராஜபக்ச தரப்பில் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT