பல பகுதிகளில் இன்று மழை... 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் எச்சரிக்கை

மேற்கு, சபரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு. வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் பல மாவட்டங்களில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் இன்று மழை... 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது லேசான மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனுடன், மத்திய உயர்நிலப் பகுதிகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், இரத்தினபுரம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தப் பகுதிகளில் மணிக்கு சுமார் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று வீசக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT