நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை டெங்கு மரணங்கள் 31 ஆக அதிகரித்துள்ளன. மொத்தமாக 51,049 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் மட்டும் 17,208 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த வருடம் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளுக்கான தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில், உயிரிழப்புகளின் விகிதம் 0.06 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

2026 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 51,049 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஜூன் மாதத்தில் மட்டும் 17,208 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேல் மாகாணம், தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அதிக அவதானம் தேவைப்படும் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளின் எண்ணிக்கை தற்போது 124 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

டெங்கு பரவலை கட்டுப்படுத்த சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருத்தல், நுளம்பு பெருக்கத்தை தடுப்பது மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறுவது முக்கியம் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT