இலங்கை கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம்: சிவப்பு எச்சரிக்கை!

இன்று (02) இரவு 08 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (03) இரவு 08 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம்: சிவப்பு எச்சரிக்கை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் தெற்குக் கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் நிலவக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (02) இரவு 08 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (03) இரவு 08 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். இங்கு மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தளம் முதல் கொழும்பு வழியாக காலி வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும். இங்கு மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மறு அறிவித்தல் வரும் வரை மேற்குறிப்பிட்ட கடற்பகுதிகளுக்குள் நுழைய வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறும், வானிலை குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT