இலங்கையின் பல பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளதுடன், நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பல பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் ஆங்காங்கே இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பதிவாக வாய்ப்புள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதேநேரம் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதனிடையே சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, கடந்த ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையிலுள்ள அட்சரேகைகளுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கிறது.

இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் நண்பகல் 12:08 மணியளவில் காலி, அங்குலுகஹ, இமதுவ, தெலிஜ்ஜவில, யடியன மற்றும் தங்காலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -