நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் பலத்த மழை பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதுடன், மின்னல் தாக்கங்கள் குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இலங்கையின் ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளதுடன், நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இன்று இலங்கையின் வடக்கு, வடமத்திய, திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டல திணைக்களம் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டின் பல மாகாணங்களில், 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும்.
ஏப்ரல் மாதம் நடுப் பகுதி வரையில் நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று (06) சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று பிற்பகல் 4 மணிக்குப் பிறகு, ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று(14) சிறிதளவு மழை பெய்யக்கூடும்.