ஹட்டனில் மண்சரிவு: வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் மாயம்

அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், அதற்குள் இருந்த நான்கு நபர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனில் மண்சரிவு: வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் மாயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹட்டன், பொல்பிட்டிய பகுதியில் இன்று (03) பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, நான்கு பேர் காணாமல் போயுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், அதற்குள் இருந்த நான்கு நபர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். தற்போது நிலவி வரும் கடும் மழையே இந்த அனர்த்தத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

காணாமல் போனவர்களைக் கண்டறியும் நோக்கில், பொலிஸாரால் தற்போது பரந்த அளவிலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ச்சியான அனர்த்த நிலைமைகள் காரணமாக, நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT