திடீரென கோடீஸ்வரரானவர்களா? ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களா? – பொதுமக்களிடம் தகவல் கோரும் பொலிஸ்!

பொதுமக்கள் வழங்கும் தகவல்கள், சட்டவிரோத சொத்துகளை கண்டறிவதற்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் பெரும் துணையாக இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீரென கோடீஸ்வரரானவர்களா? ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களா? – பொதுமக்களிடம் தகவல் கோரும் பொலிஸ்!
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

முறையான வருமான ஆதாரம் இன்றி, திடீரெனப் பெருமளவிலான சொத்துகளைச் சேர்த்துள்ள அல்லது ஆடம்பர வாழ்க்கை வாழும் நபர்கள் குறித்து தகவல் வழங்குமாறு, இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துகள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் ஏனைய சட்ட அமுலாக்கல் பிரிவினர், இத்தகைய வழக்குகளை மிக தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்டதாக நம்பப்படும் சொத்துகளைக் கண்டறிவதே இந்த விசாரணைகளின் முதன்மை நோக்கமாகும். நாடு முழுவதும் இதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தேகத்துக்கிடமான நபர்கள் அல்லது அவர்களின் செயல்பாடுகள் குறித்து தகவல் வழங்குவது, சமூகத்தின் நலனைப் பாதுகாக்கவும் விசாரணைகளை வலுப்படுத்தவும் இன்றியமையாதது என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், பொதுமக்கள் வழங்கும் தகவல்கள், சட்டவிரோத சொத்துகளை கண்டறிவதற்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் பெரும் துணையாக இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சமூகத்தின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என வலியுறுத்தியுள்ள பொலிஸார், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை தாமதமின்றி வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT