குடும்பத் தகராறு: கணவரின் தாக்குதலில் படுகாயமடைந்த 29 வயது இளம் பெண் உயிரிழப்பு

அரலகன்வில பிம்பொக்குன பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத் தகராறு: கணவரின் தாக்குதலில் படுகாயமடைந்த 29 வயது இளம் பெண் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

அரலகன்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிம்பொக்குன பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட துயர சம்பவத்தில் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தகவலின்படி, இந்தச் சம்பவம் நேற்று (03) இரவு இடம்பெற்றுள்ளது. குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, கணவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பின்னர் கவலைக்கிடமான நிலையில் அவர் அரலகன்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர் அரலகன்வில பிம்பொக்குன பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதேவேளை, சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் கணவரை கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT