கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை: 23 வயது யுவதி உட்பட 5 சந்தேகநபர்கள் கைது

மற்றொரு நடவடிக்கையில், கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் மட்டக்குளிய, தொம்பே மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 28 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். 

கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை: 23 வயது யுவதி உட்பட 5 சந்தேகநபர்கள் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

திட்டமிடப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான 'கஞ்சிபானை இம்ரான்' என்பவரின் நெருங்கிய உறவினரான (சித்தப்பா) 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொஹிதீன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், 23 வயது யுவதி ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்களை, பொலிஸார் நேற்று (17) கைது செய்துள்ளனர். 

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம், கடந்த 10ஆம் திகதி பிற்பகல் 1.20 மணியளவில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனையடுத்து கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரும், மேற்படி 23 வயதுடைய யுவதியும் கொழும்பு வடக்கு குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். 

இவர்களிடமிருந்து 25 கிராம் 840 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மற்றொரு நடவடிக்கையில், கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் மட்டக்குளிய, தொம்பே மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 28 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவர்களிடமிருந்து 12 கிராம் 380 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தற்போது பிரான்ஸில் தங்கியுள்ளதாகக் கருதப்படும் 'கூடு அஞ்சு' என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரே இந்தக் கொலையை வழிநடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

சமீபத்தில் இரத்மலானை பகுதியில் 'கூடு அஞ்சு'வின் நெருங்கிய சகாவொருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பழிவாங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்ற நிலையில், காயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT