பல்வலி வந்த பிறகுதான் வைத்தியரை நாடுகிறீர்களா? பல் சுகாதாரம் குறித்து பிரதமரின் முக்கிய அறிவுறுத்தல்!

வாய்ப் புற்றுநோய் மற்றும் புகையிலை, வெற்றிலை, பாக்கு, தீங்கு விளைவிக்கும் மதுபானப் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பல்வலி வந்த பிறகுதான் வைத்தியரை நாடுகிறீர்களா? பல் சுகாதாரம் குறித்து பிரதமரின் முக்கிய அறிவுறுத்தல்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் அரச பல் வைத்திய சேவையில் சிகிச்சைக்கு மாத்திரமன்றி, நோய்களைத் தடுப்பது, ஆரம்பத்திலேயே கண்டறிவது மற்றும் அனைவருக்கும் சமமான மருத்துவச் சேவையை வழங்குவது ஆகியவற்றுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரச பல் வைத்திய சேவையின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (22) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

1926ஆம் ஆண்டு கொழும்பு பொது வைத்தியசாலையில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட அரச பல் வைத்திய சேவை, தற்போது நாடளாவிய ரீதியில் 600 சிகிச்சை நிலையங்களையும் சுமார் 1,350 பல் வைத்தியர்களையும் கொண்ட வலையமைப்பாக வளர்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், 12 வயதுக் குழந்தைகளிடையே காணப்பட்ட பல் சொத்தை பாதிப்பு முன்னர் சுமார் 67 சதவீதமாக இருந்த நிலையில், 2015–2016ஆம் ஆண்டு ஆய்வின்படி 30.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், இதற்கு பாடசாலை பல் வைத்தியச் சேவைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பல்வலி ஏற்பட்ட பின்னரே பலர் பல் வைத்திய ஆலோசனைகளைப் பெறுவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், நோய் ஏற்படுவதற்கு முன்னரே சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், வாய்ப் புற்றுநோய் மற்றும் புகையிலை, வெற்றிலை, பாக்கு, தீங்கு விளைவிக்கும் மதுபானப் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பொருளாதார நிலை, புவியியல் அமைவிடம் அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் தரமான பல் வைத்தியச் சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT