காலாவதியான ஊசிகள், அதிக கட்டணம் வசூலித்த மற்றுமொரு தனியார் வைத்தியசாலைக்கு ரூ. 520,000 அபராதம்

இந்த வைத்தியசாலைக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

காலாவதியான ஊசிகள், அதிக கட்டணம் வசூலித்த மற்றுமொரு தனியார் வைத்தியசாலைக்கு ரூ. 520,000 அபராதம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கேகாலையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று, இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலித்தமை மற்றும் காலாவதியான மருத்துவ இரசாயனங்கள் மற்றும் ஊசிகளை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக ரூ. 520,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கேகாலை - கொழும்பு வீதியில் அமைந்துள்ள கெண்டெல்லா வைத்தியசாலைக்கே (Candella Hospital (Pvt) Ltd) மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த வைத்தியசாலைக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

1. முழுமையான இரத்த பரிசோதனைக்கு (FBC) நிர்ணயிக்கப்பட்ட விலையான ரூ. 400-க்கு பதிலாக ரூ. 500 வசூலித்தமை.

2. வைத்தியசாலை ஆய்வகத்தில் காலாவதியான 20 பொதிகள் எச்.சி.வி ரேபிட் டெஸ்ட் கேசெட்டுகள் (HCV Rapid Test Cassettes) மற்றும் இதர காலாவதியான இரசாயனங்களை வைத்திருந்தமை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

3. மருந்தகத்தில் விற்பனைக்காக 23 பொதிகள் காலாவதியான ஒற்றைப் பயன்பாட்டு ஊசிகளை (UNOLOK single-use hypodermic needles) வைத்திருந்தமை.

இந்த விதிமீறல்கள், கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதியன்று அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது கண்டறியப்பட்டன. 

கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் இம்மாதம் ஓகஸ்ட் 6ஆம் திகதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வைத்தியசாலை நிர்வாகம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் மேற்படி அபராதத்தை விதித்தது.

தனியார் வைத்தியசாலைகள் அல்லது ஆய்வகங்கள் காலாவதியான மருந்துகளைப் பயன்படுத்தினாலோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக கட்டணம் வசூலித்தாலோ, பொதுமக்கள் 1977 என்ற துரித இலக்கத்துக்கு அழைத்து முறைப்பாடு அளிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT