2026 மூன்றாம் தவணை: நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (க.பொ.த. உயர்தர) பரீட்சை ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டெம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சு நினைவூட்டியுள்ளது.

2026 மூன்றாம் தவணை: நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

2026ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரசின் அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை அட்டவணையை கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) நிறைவடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பாடசாலைகளுக்கு விடுமுறை அமலுக்கு வரும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் செப்டம்பர் 2ஆம் திகதி நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுமுறைக்குப் பின்னர், அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் செப்டெம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026 கல்வியாண்டுக்கான மூன்றாம் தவணை டிசெம்பர் 4ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (க.பொ.த. உயர்தர) பரீட்சை ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டெம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சு நினைவூட்டியுள்ளது.

உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு, பரீட்சை நடைபெறும் பாடசாலைகள் மற்றும் மாணவர்கள் தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT