ரூ.5 லட்சம் இலஞ்சம்: மொனராகலை குற்றத்தடுப்புப் பிரிவின் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

விசாரணையின் போது, ஓகஸ்ட் 10ஆம் திகதி மொனராகலை குற்றத்தடுப்புப் பிரிவின் 06  உத்தியோகத்தர்கள் அங்கு வந்து, தன்னிடம் 500,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக்கொண்டு, ஒரு கஞ்சா தோட்டத்தை மட்டும் எரித்துவிட்டு எஞ்சியவற்றை எடுத்துச் சென்றதாக சந்தேகநபர் வெளிப்படுத்தினார்.
 ரூ.5 லட்சம் இலஞ்சம்: மொனராகலை குற்றத்தடுப்புப் பிரிவின் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தனமல்வில, நிகவெவ தெமோதர தடாகத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 500,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், மொனராகலை பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் புத்தலையைச் சேர்ந்த 37 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட், தெஹியத்தகண்டியவைச் சேர்ந்த 45 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட், பிபிலையைச் சேர்ந்த 39 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி மற்றும் பிபிலையைச் சேர்ந்த 36 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் அடங்குவர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தனமல்வில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஓகஸ்ட் 11ஆம் திகதியன்று ஒரு பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியைச் சுற்றிவளைத்து சந்தேகநபர் ஒருவர் கஞ்சா தோட்டத்துடன் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மேலும் மூன்று கஞ்சா பயிர்ச்செய்கை நிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணையின் போது, ஓகஸ்ட் 10ஆம் திகதி மொனராகலை குற்றத்தடுப்புப் பிரிவின் 06  உத்தியோகத்தர்கள் அங்கு வந்து, தன்னிடம் 500,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக்கொண்டு, ஒரு கஞ்சா தோட்டத்தை மட்டும் எரித்துவிட்டு எஞ்சியவற்றை எடுத்துச் சென்றதாக சந்தேகநபர் வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், நிகவெவ பகுதியைச் சேர்ந்த 'களு' எனப்படும் மற்றொரு நபர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். அந்த பொலிஸ் உத்தியோகத்தர்களே கஞ்சாவை உலர்த்துமாறு தன்னிடம் கூறியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைக்காக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. 

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தனமல்வில பொலிஸாரால் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர