கொஹுவல மேம்பால போலிச் செய்தி: வதந்தி பரப்புவோருக்கு பொலிஸ் விடுத்த கடும் எச்சரிக்கை!

பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக, தண்டனைச் சட்டம் மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் எச்சரித்துள்ளது.

கொஹுவல மேம்பால போலிச் செய்தி: வதந்தி பரப்புவோருக்கு பொலிஸ் விடுத்த கடும் எச்சரிக்கை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொஹுவல மேம்பாலத்தின் கீழ் மோட்டார் சைக்கிளில் ஒருவர் இறந்து கிடப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படம் முற்றிலும் தவறானது என்றும், இது போன்ற போலிச் செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை பொலிஸ்  எச்சரித்துள்ளது.

பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக, தண்டனைச் சட்டம் மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சமூக வலைதளங்கள் வாயிலாகப் பொய்யான தகவல்கள், புனையப்பட்ட செய்திகள் அல்லது வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளைப் பகிர்வது இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.

"உண்மையை உறுதிப்படுத்தாமல் எதையும் பகிர வேண்டாம்" என்றும் பொலிஸார், பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

எந்தவொரு தகவலையும் சமூக வலைதளங்களில் பகிரும் முன், அதன் அசல் ஆதாரத்தைச் சரிபார்க்கவும், நம்பகமான உத்தியோகபூர்வ தகவல்களுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்தவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னதாக கொஹுவல மேம்பாலத்தின் கீழ், தனது மோட்டார் சைக்கிளிலேயே உறங்கிக் கொண்டிருந்த நிலையில், உயிரிழந்த இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலி செய்தி பரவியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT