கொள்ளுப்பிட்டி சந்தியில் கையடக்கத் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட வெளிநாட்டவர் கைது!

தப்பியோடிய வெளிநாட்டவரை அங்கிருந்த உள்ளூர் நபர் ஒருவர் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி சந்தியில் கையடக்கத் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட வெளிநாட்டவர் கைது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு, கொள்ளுப்பிட்டி சந்தியில் பாதசாரி ஒருவரின் கையடக்கத் தொலைபேசியைப் பறித்துச் சென்ற குற்றச்சாட்டின் கீழ், வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர், வீதியில் சென்ற ஒருவரிடமிருந்து கையடக்கத் தொலைபேசியைப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தப்பியோடிய வெளிநாட்டவரை அங்கிருந்த உள்ளூர் நபர் ஒருவர் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளார்.

பிடிபட்ட நபர் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சம்பவ இடத்திலிருந்த நேரில் கண்ட சாட்சிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், குறித்த வெளிநாட்டவரை பொலிஸாரும் பொதுமக்களும் சூழ்ந்திருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகளும் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT