ஆரம்ப விசாரணைகளில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, சந்தேகநபர்கள் முதலில் முகநூல் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வாங்குபவர்களை தொடர்புகொண்டுள்ளனர்.
குழுவொன்று சம்பவ இடத்துக்கு வந்து குறித்த வீட்டை இலக்காகக் கொண்டு, பல சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அரலகன்வில பிம்பொக்குன பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளானது. பேருந்து சாரதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்துள்ளது.
வீட்டின் வெளியே நடந்த இந்த தாக்குதலில், அருகிலுள்ள காடு போன்ற பகுதியில் பதுங்கியிருந்த நபர் ஒருவர் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் போலி தலைமுடி (Wig) அணிந்து தனது உண்மையான தோற்றத்தை மறைத்து வாழ்ந்திருக்கலாம் என்றும், பல பெண்களுடன் தொடர்புகளை பேணி, அவர்களை ஏமாற்றி பணம் பறித்த சம்பவங்களிலும் தொடர்புடையவராக இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடமையாற்றிய வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல் போன நிலையில், அவரது சடலம் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். காயமடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இளைஞன் சமூகப் பணிகளிலும் கோவில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
கொழும்பு, கொலொன்ன வைத்தியசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் 47 வயதுடைய நபரின் சடலம் இரத்தக் கறைகளுடன் மீட்கப்பட்டுள்ளது. தலைப்பகுதியில் இரத்தக்கறையும், காலில் வெட்டுக்காயமும் காணப்பட்டன.
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள மிளகாய் தோட்டக் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
வீதியோரத்தில் நின்றிருந்த அந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 15ஆம் திகதி காலி, அகலிய – குட்டியாவத்தை உட்புற வீதியில் இந்தக் காரை நுகேகொட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.
குடும்பத் தகராறு தீவிரமடைந்த நிலையில், கணவன் தனது மனைவியை தீ வைத்து கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் ஊர்காவற்துறை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது சிறுவனின் இறுதிச்சடங்குகள் இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன.
சம்பவத்தில் ஈடுபட்ட பெக்கோ இயந்திரம் கொழும்பு மாநகர சபையின் பணிப்பிரிவுக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.