துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயம் - தப்பியோடிய சந்தேக நபருக்கு பொலிஸார் வலைவீச்சு

வீட்டின் வெளியே நடந்த இந்த தாக்குதலில், அருகிலுள்ள காடு போன்ற பகுதியில் பதுங்கியிருந்த நபர் ஒருவர் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயம் - தப்பியோடிய சந்தேக நபருக்கு பொலிஸார் வலைவீச்சு
ADVERTISEMENT
ADVERTISEMENT

குருநாகல் வெல்லாவ பகுதியில் இன்று (23) காலை ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 46 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று காலை 6.45 மணியளவில், வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த குறித்த பெண்ணை, அருகிலுள்ள காடு போன்ற பகுதியில் மறைந்திருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதில் பலத்த காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு தவறான உறவே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

சம்பவத்தின் பின்னணியில் கள்ளக்காதலன் இருப்பதாகவும், அந்த நபரே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் பொலிஸார் கருதுகின்றனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சந்தோக நபரை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT