கொலொன்ன பாழடைந்த வீட்டில் இரத்தக் கறைகளுடன் சடலம் மீட்பு

கொழும்பு, கொலொன்ன வைத்தியசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் 47 வயதுடைய நபரின் சடலம் இரத்தக் கறைகளுடன் மீட்கப்பட்டுள்ளது. தலைப்பகுதியில் இரத்தக்கறையும், காலில் வெட்டுக்காயமும் காணப்பட்டன.

கொலொன்ன பாழடைந்த வீட்டில் இரத்தக் கறைகளுடன் சடலம் மீட்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொலொன்ன பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் இரத்தக் கறைகளுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

கொலொன்ன, வைத்தியசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொலொன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உயிரிழந்தவர் கொலொன்ன பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார். இவர் தனது மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த மே 18ஆம் தேதி மாலை தனது சகோதரியின் வீட்டிலிருந்து இந்தப் பாழடைந்த வீட்டிற்கு வந்துள்ளார்.

பெரும்பாலான சமயங்களில் இந்த வீட்டிலேயே தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலத்தின் தலைப்பகுதிக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்படுவதுடன், காலில் வெட்டுக்காயம் என சந்தேகிக்கப்படும் காயமும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது என்பதால், கொலொன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT