வனத்தவில்லுவவில் தெப்பம் கவிழ்ந்ததில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
வனத்தவில்லுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாராநாயகபுர பகுதியில் மலர்களைச் சேகரிப்பதற்காக தெப்பத்தில் சென்றுகொண்டிருந்த நான்கு பாடசாலை மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
படகு கவிழ்ந்தபோது அதில் ஐந்து மாணவர்கள் பயணம் செய்துகொண்டிருந்ததாகவும், அவர்கள் அனைவரும் நீரில் விழுந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், ஏனைய மாணவர்கள் மீட்கப்பட்டு வனத்தவில்லுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கவலைக்கிடமான நிலையில் இருந்த நான்கு மாணவர்கள் பின்னர் புத்தளம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு அவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் அப்பகுதியில் உள்ள பாடசாலையொன்றிர் கல்வி பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.