காலி - மஹமோதரையில் புதிய சிறைச்சாலை அமைப்பதற்கான வர்த்தமானி வெளியீடு

நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களைக் குறைக்கும் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. 

காலி - மஹமோதரையில் புதிய சிறைச்சாலை அமைப்பதற்கான வர்த்தமானி வெளியீடு
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

காலி - மஹமோதரையில் புதிய சிறைச்சாலை அமைப்பதற்கான வர்த்தமானி வெளியீடு

காலி, மஹமோதரையில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் கையொப்பமிடப்பட்ட இந்த வர்த்தமானி, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சிறைச்சாலைக்கு "மஹமோதரை" எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இது இலங்கை முழுவதற்குமான அதிகார வரம்பைக் கொண்டிருக்கும்.

தற்போது மூடப்பட்டுள்ள முன்னாள் மஹமோதரை வைத்தியசாலையின் ஒரு பகுதியில் இந்த சிறைச்சாலை தற்காலிகமாக இயங்கும் என்று நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களைக் குறைக்கும் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT