இலங்கையில் தங்க விலையில் சரிவு – வாங்க எதிர்பார்த்தோருக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையிலும் தங்க விலை வரலாற்றில் முதன்முறையாக 4 இலட்சம் ரூபாவை கடந்திருந்தது. இந்நிலையிலேயே தற்போது தங்க விலையில் குறைவான போக்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் தங்க விலையில் சரிவு – வாங்க எதிர்பார்த்தோருக்கு மகிழ்ச்சி தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தங்கம் வாங்க காத்திருந்தோருக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் இன்று தங்க விலையில் குறைவு பதிவாகியுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவில் இருந்து கிடைக்கும் தகவல்களின் படி, இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 356,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 385,000 ரூபாவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உலக சந்தை நிலவரத்தின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 4,870 முதல் 4,890 அமெரிக்க டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக 5,000 அமெரிக்க டொலரை தாண்டியிருந்தது.

அதேபோல், இலங்கையிலும் தங்க விலை வரலாற்றில் முதன்முறையாக 4 இலட்சம் ரூபாவை கடந்திருந்தது. இந்நிலையிலேயே தற்போது தங்க விலையில் குறைவான போக்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT