தன்ஷிகாவுடனான திருமணம் தள்ளிப்போகிறதா? விஷால் விளக்கம்

நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் 29-ந் தேதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தன்ஷிகாவுடனான திருமணம் தள்ளிப்போகிறதா? விஷால் விளக்கம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நடிகர் விக்னேஷ், பல வருடங்களுக்கு பிறகு ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் 'ரெட் பிளவர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆக்ஸ்ட் 8-ந் தேதி வெளியாக உள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றதுடன், அதில் விஷால் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதில், விஷால் பேசும்போது, 'மதகஜராஜா' படவிழாவில் கைகள் நடுங்க நான் பேசிய வீடியோ வைரலானது. படமும் பெரிய 'ஹிட்'டானது. இன்றைக்கு மீண்டும் கைகள் நடுங்க பேசுகிறேன். எனவே இந்த 'ரெட் பிளவர்' படமும் 'ஹிட்' ஆகும்.

அதனைத்தொடர்ந்து திருமணம் தள்ளிப்போகிறதா என்று கேட்கப்பட்டது. இதற்கு விஷால் பதிலளிக்கும்போது, ''நடிகர் சங்க கட்டிடம் விரைவில் திறக்கப்படும். எனது திருமணம் அங்குதான் நடக்கும். நிச்சயம் தாமதம் ஆகாது. ஆகஸ்ட் 29-ந் தேதி நல்ல செய்தி சொல்வேன்'', என்றார்.

நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் 29-ந் தேதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -