டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானின் அரையிறுதி கனவை கலைத்தது இலங்கை!

போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தாலும், அரையிறுதி வாய்ப்பை இலங்கை அணி தட்டிப்பறித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானின் அரையிறுதி கனவை கலைத்தது இலங்கை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்புவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் 50-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பர்ஹான் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தினார். அவருக்குப் பக்கபலமாக விளையாடிய பகர் சமான் 84 ரன்கள் குவிக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. இலங்கை தரப்பில் மதுஷனகா 3 விக்கெட்டுகளையும், தசுன் ஷனகா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமானால், இலங்கை அணியை 142 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் களம் கண்டனர்.

இருப்பினும், இலங்கை வீரர்கள் பாகிஸ்தானின் பந்துவீச்சைத் திறம்பட எதிர்கொண்டு 207 ரன்கள் குவித்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட ரன் ரேட் இலக்கை பாகிஸ்தானால் எட்ட முடியாமல் போனது.

போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தாலும், அரையிறுதி வாய்ப்பை இலங்கை அணி தட்டிப்பறித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT