இரட்டைக் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய கார் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு

வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனியே சுத்தா எனப்படும் ஜெயலத் சில்வாவால் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இரட்டைக் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய கார் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு

தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் காரை நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், காலி, குட்டியாவத்தையில் உள்ள குறுக்கு வீதியொன்றில் கண்டுபிடித்துள்ளனர்.

கார் கண்டுபிடிக்கப்பட்டபோதும் எரிந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வழக்கறிஞர் புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியைக் கொல்லப் பயன்படுத்திய கார், காலி அகலிய பகுதியில் கைவிடப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று கார் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டுள்ளனர்.

வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனியே சுத்தா எனப்படும் ஜெயலத் சில்வாவால் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட சட்டத்தரணி முன்னர் கரந்தெனிய சுத்தாவின் வழக்கிற்கும், பின்னர் அவரது முக்கிய போட்டியாளரான "லொக்கு பெட்டி" என்ற நபரின் வழக்கிற்கும் ஆஜரானதாகவும், அதன்படி, லொக்கு பெட்டிக்கு தம்மை பற்றிய தகவல்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் சுத்தாவின் தரப்பினரால் இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

சம்பவம் குறித்து நுகேகொடை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர