தோனி எப்போது திரும்புவார்? சிஎஸ்கே கொடுத்த சூப்பர் அப்டேட்!

CSK அணியின் நட்சத்திர வீரர் MS Dhoni காயத்திலிருந்து மீண்டு வருகிறார். அவர் விரைவில் மைதானத்துக்கு திரும்புவார் என மைக் ஹஸ்ஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார். IPL 2026 தொடரில் CSK இன்னும் போராடி வருகிறது.

தோனி எப்போது திரும்புவார்? சிஎஸ்கே கொடுத்த சூப்பர் அப்டேட்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 5 முறை சாம்பியனான சென்னை அணியின் தற்போதைய நிலை ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. 

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை, 2 வெற்றிகள் மட்டுமே பெற்று 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சமீபத்தில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்தும் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கால் தசைப்பிடிப்பு காயத்திலிருந்து மீண்டு வரும் தோனி இதுவரை IPL 2026 தொடரில் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாரானாலும், பிளேயிங் லெவனில் அவர் எப்போது திரும்புவார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹஸ்ஸி  கூறுகையில், தோனி காயத்திலிருந்து நல்ல முறையில் மீண்டு வருகிறார் என்றும், அவரது பேட்டிங் திறன் குறித்து திருப்தி இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது அவர் ரன்னிங் ஃபிட்னஸை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

“போட்டியின் கடைசி கட்டங்களில் வேகமாக ஓடி ரன்கள் எடுப்பது மிகவும் முக்கியம். அந்த ஃபிட்னஸை அவர் மீண்டும் பெற முயற்சி செய்கிறார். அவர் விரைவில் மைதானத்துக்கு திரும்புவார் என நம்புகிறோம்,” என ஹஸ்ஸி கூறினார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT