மீண்டும் சில போட்டிகளை தவறவிடும் சூர்யகுமார் யாதவ்?

சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

மார்ச் 29, 2024 - 11:21
மீண்டும் சில போட்டிகளை தவறவிடும் சூர்யகுமார் யாதவ்?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் ஏற்கனவே 2 போட்டிகளை தவறவிட்டார். அந்த 2 போட்டியிலும் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. 

இதனால் மும்பை ரசிகர்கள் அவர் எப்போது களத்திற்கு திரும்புவார் என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

அவர் போட்டிக்கான முழு உடல் தகுதியை எட்டாததால் மேலும் சில ஐ.பி.எல். ஆட்டங்களை தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!