அத மட்டும் பண்ணுங்க, கோப்பை நமக்குதான்...  ரசிகர்களிடம் சத்தியம் செய்த ஹர்திக்...

சிஎஸ்கேவே போட்டியை வென்றிருந்தாலும் கடைசி வரை போராடிய குஜராத்தின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றிருந்தது.

Mar 5, 2024 - 17:57
Mar 22, 2024 - 18:23
அத மட்டும் பண்ணுங்க, கோப்பை நமக்குதான்...  ரசிகர்களிடம் சத்தியம் செய்த ஹர்திக்...

ரோஹித்தை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியின் கேப்டனாக மாற்றியது, சம்பளப் பட்டியலில் இருந்து ஷ்ரேயஸ், இஷான் கிஷன் போன்ற வீரர்களை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியா பெயர் தொடர்ந்து இடம் பெற்றது என அவரை சுற்றி பல்வேறு சர்ச்சையான சம்பவங்கள் நடந்து வருகின்றன.

மும்பை அணிக்காக பல ஆண்டுகள் ஆடிவந்த ஹர்திக் பாண்டியா, கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் என்ற புதிய அணி உருவாகிய போது, டிரேடிங்கில் பெற்றுக் கொண்டு அந்த அணியின் கேப்டனாகவும் மாறி இருந்தார். 

ஹர்திக் பாண்டியா குஜராத்தை வழிநடத்திய இரண்டு சீசன்களிலும் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. அதிலும் தாங்கள் அறிமுகமான முதல் சீசனிலேயே கோப்பையை வென்று மற்ற ஒன்பது அணிகளில் இருந்த ரசிகர்களையும் ஏங்க வைத்திருந்தார் ஹர்திக் பாண்டியா.

தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த ஃபைனலிலும் குஜராத் அணி முன்னேற, நூலிழையில் தங்களின் இரண்டு சீசன்களிலும் கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் அவர்கள் தவற விட்டிருந்தனர். 

சிஎஸ்கேவே போட்டியை வென்றிருந்தாலும் கடைசி வரை போராடிய குஜராத்தின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றிருந்தது.

குஜராத் அணியை கம்பீரமாக வழி நடத்தி வந்த ஹர்திக் பாண்டியா திடீரென மும்பை அணிக்கு ஆடுவதாக விருப்பம் தெரிவித்து மும்பை அணியில் இணைந்ததுடன் மட்டுமில்லாமல், அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஒரு பக்கம் ஹர்திக் கேப்டனாக மாறியதால் ரோஹித் ரசிகர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம் குஜராத் அணியை சிறப்பாக வழிநடத்தியும் அந்த அணியில் இருந்து பிரிந்ததால் குஜராத் ரசிகர்களும் ஹர்திக் பாண்டியா மீது கோபத்தில் தான் இருக்கின்றனர்.

இப்படி இரண்டு ரசிகர்களும் மிகுந்த கோபத்தில் இருக்கும் சூழலில் தான் அதுவும் குஜராத் அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் முதல் போட்டியில் மும்பை அணி மோதுகின்றது. இதனால் ஏறக்குறைய இந்த விஷயமும் ஹர்திக் பக்கம் சாதகமாக இல்லை என்ற ஒரு சூழலில் தான் அவர் மும்பை அணியை வழிநடத்த போகிறார்.

இதனால் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை குஜராத் அணியின் கேப்டனாக இருந்து நடத்தியது போன்ற மும்பை அணிக்கும் நடத்த வேண்டிய நெருக்கடியிலும் அவர் உள்ளார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் குறித்து ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ள விஷயம் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

“ரசிகர்களின் அளவு கடந்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்புவது, எல்லாம் தொடங்கிய இடத்திற்கு மீண்டும் திரும்புவது போலவும் எனக்கு உணர்வைத் தருகின்றது. இன்று நான் ஒரு கிரிக்கெட் வீரராக என்னை அடுத்தடுத்து நான் உருவாக்கி வருகிறேன்.

மும்பை அணி வெற்றிப்பாதைக்கு செல்வதற்காக அதே பழைய ஆதரவை நான் மும்பை ரசிகர்களுடன் நாடி நிற்கிறேன். நீங்கள் எங்கள் மீது நம்பிக்கையுடன் இருந்தால் நான் நிச்சயம் உங்களுக்கு ஒரு அருமையான ஒரு சீசனை இந்த முறை கொடுப்பேன்” என மும்பை அணி கோப்பையை வெல்லும் ரூட்டில் பயணிக்கும் என ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.