சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்களிடம் அதிக கட்டணம் வசூலித்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கைது
இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்களிடம் அதிக கட்டணம் வசூலித்த இரண்டு முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (Two tuk-tuk drivers arrested for overcharging Brazilian and Belgian tourists in Sri Lanka.)

நாட்டின் அழகைக் காண வந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்களிடமிருந்து, இரு வெவ்வேறு பயணங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் இருவர், பொலிஸாரால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு, மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு பயணங்களுக்கும் 10,000 ரூபாய் மற்றும் 30,000 ரூபாய் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த, 40 மற்றும் 48 வயதுடையவர்கள் ஆவர்.
இரண்டு வெளிநாட்டுப் பெண்களும் முறையே 2025.10.02 மற்றும் 2025.10.05 ஆகிய திகதிகளில் நாட்டிற்கு வந்த பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்கள் ஆவர்.
சந்தேகத்திற்குரிய ஓட்டுநர்கள் இருவரும், மேலதிக நடவடிக்கைகளுக்காக குருந்துவத்த மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.