ஈரானிய முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் கொல்லப்பட்ட செய்தி கேட்டு நாமல் அதிர்ச்சி

ஈரான் எப்போதும் இலங்கையின் உண்மையான நண்பனாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

ஈரானிய முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் கொல்லப்பட்ட செய்தி கேட்டு நாமல் அதிர்ச்சி
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஈரானிய முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியைக் கேட்டு தாம் பெரும் அதிர்ச்சியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அஹ்மதிநெஜாத்தை இலங்கையின் ஒரு நெருங்கிய நண்பர் என்று வர்ணித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் முன்னாள் ஈரானியத் தலைவரின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

2008ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அஹ்மதிநெஜாத் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அந்த விஜயத்தின் போது, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துதல் மற்றும் உமா ஓயா பன்நோக்கு அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட இலங்கையின் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்குவதில் அவர் முக்கிய பங்காற்றியதாக நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

ஈரான் எப்போதும் இலங்கையின் உண்மையான நண்பனாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கை மக்கள் ஈரான் மக்களுடன் நிற்பதாகவும், போர்ப் பாதையைத் தேர்ந்தெடுக்காமல் அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மஹ்மூத் அஹ்மதிநெஜாத், 2005 முதல் 2013 வரை ஈரானின் 6ஆவது ஜனாதிபதியாக பணியாற்றிய ஒரு பழமைவாத அரசியல்வாதி ஆவார். இவர் கடுமையான கொள்கைகளுக்குப் பெயர் பெற்றவர். அணுசக்தித் திட்டத்தை ஆதரித்தவர் மற்றும் அமெரிக்கா/இஸ்ரேலுக்கு எதிரான கடுமையான கருத்துகளுக்காக பிரபலமாக அறியப்பட்டவர் ஆவார். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT