கொழும்பு போர்ட் சிட்டி கடற்கரையில் யாழ். இளைஞனின் சடலம் மீட்பு

கடற்கரையில் சடலமொன்று மிதப்பதாக கொழும்பு துறைமுக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

கொழும்பு போர்ட் சிட்டி கடற்கரையில் யாழ். இளைஞனின் சடலம் மீட்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு போர்ட் சிட்டி (Port City) கடற்கரைப் பகுதியில் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞனின் சடலம், நேற்று (02) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கடற்கரையில் சடலமொன்று மிதப்பதாக கொழும்பு துறைமுக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், பெப்ரவரி 28ஆம் திகதி போர்ட் சிட்டி வளாகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்தமை உறவினர்களிடம் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT