லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைப்பு
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள், இன்று சனிக்கிழமை (05) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டுப் பயன்பாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,365 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அதேவேளை, 5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாயால் குறைக்கப்பட்டு, புதிய விலை 1,750 ரூபாயாகவும், 2.3 கிலோகிராம் நிறையுடைய சிறிய ரக எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 815 ரூபாயாகவும் திருத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -