பிரதமர் ஹரிணிக்கு பூட்டானில் உற்சாக வரவேற்பு: உலக உணவு விழிப்புணர்வு உச்சிமாநாட்டில் பங்கேற்பு

அங்கு அவர், “தருணத்துக்கேற்ப எழுச்சி பெறல்: பன்முக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்” எனும் தலைப்பில் தனது தலைமை உரையை நிகழ்த்தவுள்ளார்.

பிரதமர் ஹரிணிக்கு பூட்டானில் உற்சாக வரவேற்பு: உலக உணவு விழிப்புணர்வு உச்சிமாநாட்டில் பங்கேற்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

பூட்டானில் நடைபெறவுள்ள முதலாவது உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் (Global Conscious Food Systems) உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று திங்கட்கிழமை (31)  பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பாரோ சர்வதேச விமான நிலையத்தை (Paro International Airport) வந்தடைந்த பிரதமர் ஹரிணி அமரசூரியவை, பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) நேரில் வந்து உற்சாகமாக வரவேற்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நேற்று முதல் செப்டம்பர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டின் ஆரம்ப பொது அமர்வில் (இன்று செவ்வாய்க்கிழமை) பிரதமர் உரையாற்றவுள்ளார். 

அங்கு அவர், “தருணத்துக்கேற்ப எழுச்சி பெறல்: பன்முக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்” (Rising to the Moment: Igniting Consciousness to Address the Polycrisis) எனும் தலைப்பில் தனது தலைமை உரையை நிகழ்த்தவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது பூட்டான் பிரதமருடன் அவர் இருதரப்புக் கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நிலைத்திருக்கக்கூடிய உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் மீள்திறன் மிக்க சமூகங்களை உருவாக்குவதற்கான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக, உலகளாவிய தலைவர்கள் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகளுடன் நடைபெறும் கலந்துரையாடல்களிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT