சிறப்பு விருந்தினராக நடிகை அபிராமி கலந்துகொண்ட பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி

விழாவில் பங்கேற்ற மாணவர்களின் திறமைகளைப் பாராட்டிய நடிகை அபிராமி, அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

சிறப்பு விருந்தினராக நடிகை அபிராமி கலந்துகொண்ட பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஸ்டேயில் முபீ சலூன் (Style’s & Mubi Salon) ஏற்பாட்டில் மணமகள் அலங்காரம், ஆரி வேலைப்பாடு, தையல், மருதாணி அலங்காரம் மற்றும் கேக் பேக்கிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி, கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்றது.

இப்போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதற்காக, 'விருமாண்டி', 'தக்ஸ் லைப்' மற்றும் 'ப்ளாஸ்ட்' போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த முன்னணி இந்தியத் திரைப்பட நடிகை அபிராமி இலங்கை வந்திருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இப்போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் தங்களின் முழு ஆர்வத்துடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 

இந்த பிரமாண்ட நிகழ்வு, மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

விழாவில் பங்கேற்ற மாணவர்களின் திறமைகளைப் பாராட்டிய நடிகை அபிராமி, அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவ்விழாவிற்கு ஸ்டேயில் முபீ சலூன் ஏற்பாட்டாளர் உவய்ஸ் முபீனா தலைமை தாங்கினார். மேலும், க்ரியேட்டிவ் சலூஷன் (Creative Solutions) ஒருங்கிணைப்புக் குழுவினரும் இணைந்து இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT