குப்பை லொறி மோதி விபத்து: தாய், சகோதரருடன் வீதியில் நடந்து சென்ற 8 வயது சிறுமி உயிரிழப்பு

அதே நேரத்தில் வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், அவரது மகன் மற்றும் மகள் ஆகிய இரு பிள்ளைகளும் இவ்விபத்தில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குப்பை லொறி மோதி விபத்து: தாய், சகோதரருடன் வீதியில் நடந்து சென்ற 8 வயது சிறுமி உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

ராகம – ஹந்தான வீதியில் உள்ள வல்பொல ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் எட்டு வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து, ஓகஸ்ட் 22ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. வல்பொல விகாரை திசையிலிருந்து வல்பொல ரயில் நிலையத்தை நோக்கிப் பயணித்த குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று, ரயில் கடவையின் பாதுகாப்பு கேட்கள் (safety gates) மூடப்பட்டிருந்த நேரத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கட்டுப்பாட்டை இழந்த அந்த லொறி, ரயில் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் மற்றொரு லொறி ஆகியவற்றின் மீது மோதியுள்ளது.

அதே நேரத்தில் வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், அவரது மகன் மற்றும் மகள் ஆகிய இரு பிள்ளைகளும் இவ்விபத்தில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் எட்டு வயதுடைய சிறுமி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விபத்தில் சிக்கிய மற்றொரு லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT