இன்று நள்ளிரவு முதல் பாண் விலை ரூ.10 உயர்வு – ஏனைய பேக்கரி பொருட்களின் விலையும் மாறும்!

ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் நுகர்வோருக்கு அநீதி ஏற்படாத வகையில் மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை ரூ.10 உயர்வு – ஏனைய பேக்கரி பொருட்களின் விலையும் மாறும்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்று திங்கட்கிழமை (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் எம். கே. ஜயவர்தன, கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 17 ரூபாயால் அதிகரித்துள்ளமை காரணமாக பாணின் விலையை உயர்த்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்படி, வழக்கமான 450 கிராம் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் நுகர்வோருக்கு அநீதி ஏற்படாத வகையில் மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT