போதைப்பொருள் சட்டத்தில் மாற்றங்களை முன்வைத்த அரசு: 'ஐஸ்' சேர்ப்பு; தண்டனைகள் தொடர்பிலும் புதிய ஏற்பாடுகள்!

‘மெத்தம்பெட்டமைன்’ என்பது பொதுவாக 'ஐஸ்' (Ice) அல்லது 'கிரிஸ்டல் மெத்' என்று அழைக்கப்படும் கடுமையான, செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஒரு வீரியமிக்க போதைப்பொருளாகும்.
போதைப்பொருள் சட்டத்தில் மாற்றங்களை முன்வைத்த அரசு: 'ஐஸ்' சேர்ப்பு; தண்டனைகள் தொடர்பிலும் புதிய ஏற்பாடுகள்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவின் பேரில், நேற்று திங்கட்கிழமை (24) குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தச் சட்டமூலத்தின் மூலம் தற்போதுள்ள சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், புதிய சட்ட ஏற்பாடுகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக, குறித்த கட்டளைச் சட்டத்தின் 54ஆவது பிரிவின் முதலாவது உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஹெரோய்ன், கொக்கேய்ன், மோர்ஃபின் மற்றும் அபின் ஆகிய போதைப்பொருட்களின் பட்டியலில், ‘மெத்தம்பெட்டமைன்’ (Methamphetamine) என்ற போதைப்பொருளும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. ‘மெத்தம்பெட்டமைன்’ என்பது பொதுவாக 'ஐஸ்' (Ice) அல்லது 'கிரிஸ்டல் மெத்' என்று அழைக்கப்படும் கடுமையான, செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஒரு வீரியமிக்க போதைப்பொருளாகும்.

மேலும், அரச பகுப்பாய்வாளரால் வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பிலும் சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அத்துடன், போதைப்பொருள் குற்றங்களுக்காக குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் தொடர்பிலும் புதிய ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனுடன், போதைப்பொருள் குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்யும் போது புலனாய்வு அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் சட்டமூலத்தில் புதிய விதிமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தத் திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை விசாரணை செய்வது, சாட்சியங்களை உறுதிப்படுத்துவது மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் புதிய சட்ட ஏற்பாடுகள் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர