கோதுமை மா விலை உயர்வு: பரோட்டா, இடியப்பம், அப்பம், முட்டை ரொட்டி உள்ளிட்ட உணவுகளின் விலையும் அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை உயர்வு காரணமாக பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளிலும் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு, நாளை திங்கட்கிழமை (31) கூடவுள்ளது.

கோதுமை மா விலை உயர்வு: பரோட்டா, இடியப்பம், அப்பம், முட்டை ரொட்டி உள்ளிட்ட உணவுகளின் விலையும் அதிகரிப்பு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த சிற்றுண்டிகளின் விலைகளை 5 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இடியப்பம் ஒன்றின் விலையை 1 ரூபாயாலும், அப்பம் ஒன்றின் விலையை 2 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த புதிய விலை அதிகரிப்புகள், நேற்று (29) முதல் அமலுக்கு வந்துள்ளன.

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நேற்று முதல் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 17 ரூபாயால் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, உணவக உரிமையாளர்கள் சங்கம் இந்த விலை மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே, கோதுமை மாவின் விலை உயர்வு காரணமாக பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளிலும் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு, நாளை திங்கட்கிழமை (31) கூடவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அன்றைய கூட்டத்தில் பாண் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அந்தச் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை உயர்வைத் தொடர்ந்து, பொதுமக்களின் அன்றாட உணவுப் பொருட்களின் விலைகளிலும் அடுத்தடுத்து அதிகரிப்பு ஏற்படக்கூடிய நிலை நாட்டில் உருவாகியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT