நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிரடி உயர்வு! 12.5 கிலோ சிலிண்டருக்கு ரூ.1,775 அதிகரிப்பு

12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டுப் பாவனை சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1,775 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 4,965 ரூபாயிலிருந்து 6,740 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிரடி உயர்வு! 12.5 கிலோ சிலிண்டருக்கு ரூ.1,775 அதிகரிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை (13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டுப் பாவனை சமையல் எரிவாயு விலையை 35 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்துவதாக லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டுப் பாவனை சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1,775 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 4,965 ரூபாயிலிருந்து 6,740 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேபோன்று, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 732 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 1,988 ரூபாயிலிருந்து 2,720 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் திரவமாக்கப்பட்ட பெற்றோலிய எரிவாயுவின் (LPG) விலை அதிகரித்துள்ளமையால், இலங்கைக்கு எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான செலவு உயர்ந்துள்ளதே, இந்த விலைத் திருத்தத்திற்குக் காரணம் என லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீட்டுப் பாவனையாளர்கள் மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்குத் தடையின்றி எரிவாயு விநியோகத்தை முன்னெடுப்பதற்குத் தாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், எதிர்கால விலைத் திருத்தங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் எரிவாயு விலைக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எரிவாயு கையிருப்பு மற்றும் மாவட்ட ரீதியான விலைகள் குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர்கள் 1345 என்ற அவசர அழைப்பு இலக்கத்தினூடாக நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT