அரச மருந்துகளை விற்ற தனியார் மருந்தகம் – வைத்திய பரிந்துரையின்றி போதை மாத்திரைகளும் விற்பனை!

குறித்த மருந்தகத்தில், வைத்திய விநியோகப் பிரிவினால் அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தமை முற்றுகையின்போது தெரியவந்துள்ளது.

அரச மருந்துகளை விற்ற தனியார் மருந்தகம் – வைத்திய பரிந்துரையின்றி போதை மாத்திரைகளும் விற்பனை!
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

வைத்தியரின் பரிந்துரையின்றி போதைப்பொருளாக பயன்படுத்தக்கூடிய மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்ட மருதானையில் உள்ள மருந்தகம் ஒன்றை தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அதிகாரிகள் அண்மையில் முற்றுகையிட்டுள்ளனர்.

குறித்த மருந்தகத்தில், வைத்திய விநியோகப் பிரிவினால் அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தமை முற்றுகையின்போது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மருதானையில் உள்ள குறித்த மருந்தகத்தில் வைத்தியரின் பரிந்துரையின்றி மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக குறித்த தகவல் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டது.

தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பின்னர், மருதானை பொலிஸார் மற்றும் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம உணவு மற்றும் ஒளடதப் பரிசோதகர் நெவில் விக்கிரமசிங்க தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இணைந்து குறித்த மருந்தகத்தை முற்றுகையிட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்போது, நரம்பியல் நோயாளிகளுக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்துகள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், உரிய தகுதிகள் இல்லாத ஒருவரால் நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் குறித்த மருந்தகத்தில், இந்த மருந்துகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், மருத்துவ விநியோகப் பிரிவினால் அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும், தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்வதற்கு சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ள 8 வகையான மருந்துகளும் குறித்த மருந்தகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகளுக்காக வழங்கப்படும் இந்த மருந்துகள் குறித்த மருந்தகத்துக்கு எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு துரித விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT