பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் தாக்கப்பட்டாரா? – சமூக ஊடக வீடியோவால் விசாரணை ஆரம்பம்!

தனது தந்தை அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று அடையாள அட்டையை எடுத்துவருவதாக தெரிவித்த போதிலும், பொலிஸார் அதற்கு அனுமதிக்காமல் அவரை தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் தாக்கப்பட்டாரா? – சமூக ஊடக வீடியோவால் விசாரணை ஆரம்பம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபரொருவர், பொலிஸாரால் தாக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவைத் தொடர்ந்து இந்த விசாரணைக்கு, பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த 24ஆம் திகதி (நேற்று முன்தினம்) இரவு, தனது தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் கடுமையாக தாக்கப்பட்டதாக அவரது மகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமது வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் வைத்து தனது தந்தையை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாகவும், அவரிடம் தேசிய அடையாள அட்டை இல்லாததால் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் மகன் தெரிவித்துள்ளார்.

தனது தந்தை அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று அடையாள அட்டையை எடுத்துவருவதாக தெரிவித்த போதிலும், பொலிஸார் அதற்கு அனுமதிக்காமல் அவரை தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், பொலிஸ் நிலையத்திலும் தனது தந்தை தாக்கப்பட்டதாகவும், துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தப்பட்டதாகவும், உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை என்றும் மகன் தெரிவித்துள்ளார்.

தனது தந்தை நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சந்தேகமடைந்து பொலிஸ் நிலையத்துக்குச் சென்றபோது, அவர் காயங்களுடன் இரத்தம் வடிந்த நிலையில் இருந்ததாகவும் மகன் கூறியுள்ளார்.

அதேவேளை, சம்பவத்தின்போது தனது தந்தை மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் கூறும் தகவலையும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மாறுபட்ட விளக்கத்தை வழங்கியுள்ளனர்.

ஓகஸ்ட் 24ஆம் திகதி இரவு, மதுபோதையில் வீதியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரைக் கைது செய்ய முற்பட்டபோது அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், அவ்வாறு முயற்சித்தபோது கீழே விழுந்ததன் காரணமாகவே வீடியோவில் காணப்படும் இரத்தக் காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர், நேற்று செவ்வாய்க்கிழமை (25) குறித்த நபர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு நீதித்துறை வைத்திய அதிகாரியால் பரிசோதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பலப்பிட்டிய மேலதிக நீதவான் அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பொலிஸ் அதிகாரிகள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தனியான விசாரணையை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

காலி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும், அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் உள்ளடங்கும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு வெளியே பணியாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் விசாரணைக்கு தலைமை தாங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நபருக்கு ஏற்பட்ட காயங்களுக்கான உண்மையான காரணம் மற்றும் குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், பொலிஸார் வழங்கியுள்ள விளக்கம் ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடுகள் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Source: Newswire

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT