பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழா

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் இந்த கிரிக்கெட் விழா நடைபெறவுள்ளது.

பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழா
ADVERTISEMENT
ADVERTISEMENT

எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் எதிர்வரும் ஜுன் 07, 08 மற்றும் 09திகதிகளில் நடைபெறவுள்ளது.

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் இந்த கிரிக்கெட் விழா நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அணிக்கு 11 பேரை கொண்டதாக நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு வருடங்களை சேர்ந்த க.பொ.த சாதாரண தர வகுப்பு அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.

07 ஆம் திகதி காலை பாடசாலையில் இருந்து இடம்பெறும் நடைப்பவணியை தொடர்ந்து முதற்சுற்று போட்டிகள் ஆரம்பமாகவுள்ளதுடன், 09ஆம் திகதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த போட்டியில் கலந்துகொள்ளும் அணிகளை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு பழைய மாணவர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT