மலையக ரயில் பாதையில் மண்சரிவு: பொல்கஹவெல - கம்பளை, கம்பளை - கொழும்பு சேவைகள் தாமதம்

மலையக ரயில் பாதையில் மண் மற்றும் கற்கள் விழுந்ததால் பொல்கஹவெல - கம்பளை மற்றும் கம்பளை - கொழும்பு கோட்டை ரயில் சேவைகள் தாமதமாகின, பாதையை வழமைக்கு கொண்டுவரும் பணிகள் தொடர்கின்றன.

மலையக ரயில் பாதையில் மண்சரிவு: பொல்கஹவெல - கம்பளை, கம்பளை - கொழும்பு சேவைகள் தாமதம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ரயில் மார்க்கத்தில் மண் மற்றும் கற்கள் விழுந்துள்ளதால், பொல்கஹவெலயிலிருந்து கம்பளை நோக்கியும், கம்பளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கியும் பயணிக்கும் ரயில் சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பாதையில் விழுந்துள்ள மண் மற்றும் கற்களை அகற்றி, ரயில் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT