ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து மீது கற்பாறை விழுந்து பயணி பலி

ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்து மீது கற்பாறை விழுந்த விபத்தில் அகரபத்தனையப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பயணி ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மனைவியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து மீது கற்பாறை விழுந்து பயணி பலி
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்து மீது மலையிலிருந்து உருண்டு விழுந்த பாரிய கற்பாறை மோதிய விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (28) பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை - களுகல பொலிஸ் காவலரணுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான குறித்த பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மலை உச்சியிலிருந்து திடீரென உருண்டு வந்த பாரிய கற்பாறை பேருந்தின் மீது மோதியதில், பேருந்தின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகினார்.

உடனடியாகப் பொலிஸாரும் ஏனைய பயணிகளும் இணைந்து காயமடைந்தவரை கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோதிலும், அவர் ஏற்கனவே வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விபத்தில் உயிரிழந்தவர் அகரபத்தனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார். மேலும், இத்துடன் விபத்தின்போது அவருடன் பயணித்த அவரது மனைவியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திடீரெனப் பாறை மோதியதில் குறித்த பேருந்தும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

பொல்பிட்டிய பகுதியில் பெய்த கனமழையின் காரணமாகவே மலைப் பாறை சரிந்து பேருந்தின் மீது விழுந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பொல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT