மண்சரிவால் தடைப்பட்ட ஹட்டன்–நுவரெலியா வீதி: ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து ஆரம்பம்!
ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் முற்றாகத் தடைப்பட்டிருந்த போக்குவரத்து, தற்போது பகுதியளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குடாகம பகுதியில் வீதியை அண்மித்த மண்மேடு ஒன்று சரிந்து வீதியின் மீது விழுந்ததைத் தொடர்ந்து, குறித்த வீதியூடான வாகனப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்தது.
இதனால் ஹட்டன் மற்றும் நுவரெலியா நகரங்களுக்கு இடையில் பயணித்த வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன், வீதியைப் பயன்படுத்தும் பயணிகளும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மண்சரிவைத் தொடர்ந்து வீதியில் குவிந்திருந்த மண்ணை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட வீதிப் பகுதியின் ஒரு வழிப்பாதை ஊடாக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பகுதியில் இருவழிப் போக்குவரத்து இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை.
மண்சரிவால் பாதிக்கப்பட்ட வீதிப் பகுதியில் வாகனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட முறையிலேயே பயணித்து வருகின்றன.
வீதியின் ஒரு பகுதி மாத்திரமே போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதால், குறித்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிப்பது அவசியமாகும்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

