ஹட்டன்–டிக்கோயாவில் டிப்பர் – பிக்அப் நேருக்கு நேர் மோதி விபத்து; சாரதி படுகாயம்

ஹட்டன் - டிக்கோயா, தரவளை பகுதியில் டிப்பர் வாகனமும் பால் ஏற்றிச் சென்ற பிக்அப் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பிக்அப் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

ஹட்டன்–டிக்கோயாவில் டிப்பர் – பிக்அப் நேருக்கு நேர் மோதி விபத்து; சாரதி படுகாயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹட்டன் - டிக்கோயா, தரவளை பகுதியில் டிப்பர் வாகனமும் பால் ஏற்றிச் சென்ற பிக்அப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து, இன்று திங்கட்கிழமை (05) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பகுதியிலிருந்து சாஞ்சிமலை நோக்கிப் பயணித்த பெரிய ரக டிப்பர் வாகனமும், சாஞ்சிமலையிலிருந்து டிக்கோயா பகுதி நோக்கிப் பால் ஏற்றிச் சென்ற சிறிய ரக பிக்அப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விபத்தில் பிக்அப் ரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன், பால் ஏற்றிச் சென்ற பிக்அப் வாகனத்துக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்துக் காரணமாக குறித்த பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

வாகனங்களின் அதிக வேகம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT