உணவு ஒவ்வாமை காரணமாக பாடசாலை மாணவர்கள் 35 பேர் வைத்தியசாலையில் அனுமதி
வட்டவளை பாடசாலையொன்றில் இன்று (17) காலை வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமைக்கு உள்ளானதில் பாடசாலை மாணவர்கள் 35 பேர் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த காலை உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட வாந்தி, மயக்கம் மற்றும் நெஞ்சுவலி காரணமாகவே இம்மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பிரதேச வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலையின் தரம் 3 தொடக்கம் தரம் 5 வரை கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மாணவர்களுக்கு காலை உணவாகச் சோறு, உருளைக்கிழங்கு, பீட்ரூட் கறி மற்றும் கீரைவகை என்பன வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் உடல்நிலை பாரதூரமானதாக இல்லை என மாவட்ட வைத்தியர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸாரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.