நுவரெலியா விடுதியில் பெண் கொலை: பொலிஸில் இருத்து தப்பிய சந்தேகநபரே மீண்டும் கைது

நுவரெலியா மாகஸ்தோட்டை பகுதியிலுள்ள தங்குமிட விடுதியொன்றில் இடம்பெற்ற பெண் கொலை தொடர்பில், பொலிஸ் காவலிலிருந்து தப்பியிருந்த 27 வயதுடைய சந்தேகநபரை, நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நுவரெலியா விடுதியில் பெண் கொலை: பொலிஸில் இருத்து தப்பிய சந்தேகநபரே மீண்டும் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

நுவரெலியா நகரிலுள்ள தங்குமிட விடுதியொன்றில் அண்மையில் இடம்பெற்ற பெண் ஒருவரின் கொலைச் சம்பவம் தொடர்பில், பொலிஸ் காவலிலிருந்து தப்பிச் சென்றிருந்த 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, நுவரெலியா பஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து நேற்று (நவம்பர் 12) இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகஸ்தோட்டை பகுதியிலுள்ள தங்குமிட விடுதியொன்றில் கடந்த நவம்பர் 10ஆம் திகதி இந்தக் கொலைச் சம்பவம் பதிவாகியிருந்தது.

சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், விசாரணை அதிகாரிகள் திரட்டிய புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திறப்பனை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலதிக விசாரணைகளின் போது, குறித்த சந்தேகநபர் கடந்த நவம்பர் 10ஆம் திகதி தெறிப்பஹ பொலிஸ் பிரிவில் பொலிஸ் காவலிலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT