குறித்த மட்டக்குதிரை தாக்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் தீவிர தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக இன்று (6) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் காற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பெற்றோர்களும் மாணவர்களும் தங்களது பாடசாலைகள் வெளியிடும் அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் களுத்துறை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரம் பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் உட்பட 7 மாவட்டங்களில் 50 மிமீக்கும் அதிக மழை பெய்யும். பலத்த காற்று, மின்னல் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'ஏக்கிய ராஜ்ய' அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதை நிறுத்துவதற்கும், தமிழ் மக்கள் விரும்பும் தாயம், தேசியம், சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வை சாத்தியமாக்குவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியாவால் அழுத்தம் பிரயோகிக்க முடியும் என்று தமிழ்த் தேசியப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
வட,கிழக்கைப் பிரதிநிதித்துவம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும் இடையிலான சந்திப்பு 19-04-2026 அன்று தாஜ் சமுத்திரா விடுதியில் நேற்றையதினம் நடைபெற்றிருந்தது.
மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்துவதற்கான சாதகமான சமிக்ஞையை ஜனாதிபதி அநுரகுமார வெளிப்படுத்தினார் என்று இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடத்தில் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து உரையாடினார்.
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்தியாவின் உப ஜனாதிபதி ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை 19-04-2026 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், தனது இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் பகுதியாக இன்று கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.
பொலிஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தபோது அங்கிருந்த அதிகாரி ஒருவருக்கு வந்த தொலைபேசி அழைப்பினைத் தொடர்ந்து, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தாக்கி சித்திரவதை செய்ததாக யுவராஜ் கூறுகிறார்.
'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ் தகுதியைப் பெற்ற 16,800 பயனாளிகள் இதுவரை தமக்கான வங்கி கணக்குகளை ஆரம்பிக்கவில்லை என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இன்று (13) காலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.